பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிக்ள் 123 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புல இன்பத்தை நுகரும் நிலையில் நாளும் ஒற்றியூர் இறைவனையும் தவறாது வழிபட்டுப் பேரின்பத்தையும் நுகர்வாராயினர். இச் செய்தி, ஒர்ந்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள் சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்றுதிரு வொற்றி யூர்புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே (7.45:4) என்ற சுந்தரர் வாய்மொழியால் அறியலாம். (10) கண்களை இழந்து வருந்துதல்: நம்பியாரூரர் சங்கிலியாருடன் திருவொற்றியூர் மகிழ்ந்துறையும் நாளில் இளவேனிற் பருவம் எய்துகின்றது. அக்காலத்தில் வீதி விடங்கப் பெருமானுக்குத் திருவாரூரில் நடைபெறும் வசந்த விழாவையும் அத்திருவிழாவில் நடைபெறும் பரவையாரின் ஆடல் பாடல் களையும் கண்டு கேட்டு மகிழ்ந்த நிலை நினைவிற்கு வர, அதனால் ஏசற்ற உள்ளத்தராகின்றார். இத்தனை நாள் பிரிந்திருந்த நிலையினை எண்ணி, நைந்த சிந்தையினராய், பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் பொத்தினநோய் அதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் முத்திணைமா மனிதன்னைப் வயிரத்தை மூர்க்கனேன் எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. (7.51:1)