பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மூவர் தேவாரம் - புதிய பார்வை ஏழிசையாய் இசைப்பயனாய் இனைமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. (7.51:10) என வரும் திருப்பதிகப் பாடல்களைப் பாடிப் போற்றுகின்றார். இவை திருவொற்றியூரிலிருந்து கொண்டே திருவாரூர் ஈசனைப் போற்றியவை. மற்றொரு நாள் திருவாரூர் நினைவு மூளப் பெற்று ஒற்றியூர்ப் பெருமானை இறைஞ்சி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு திருவாரூர் புறப்படுகிறார். சங்கிலியாருக்குத் தந்த சூளுரைக்கு மாறாக அவரைப் பிரிந்து ஒற்றியூர் எல்லையைக் கடந்தபொழுது அவருடைய இரண்டு கண்களும் ஒளி இழந்தன. வழி தெரிந்து நடக்க முடியாமல் மூர்ச்சை அடைகின்றார். செய்வதறியாது திகைப்புறுகின்றார். 'சங்கிலிபால் செய்த சூளுரை தவறினமையால் தமக்குண்டாகிய பழிக்கும் நாணி 'இக்கொடுந் துயரம் நீங்க எம் பெருமானைப் பாடிப் போற்றுவேன்' என நினைந்து, அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானால் பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்றுநானறியேன் மறுமாற்றம் ஒழுக்க என்கணுக் கொருமருந்துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறைவானே. (7.54:1) என்ற முதற் பாடலையுடைய திருப்பதிகத்தைப் பாடித் தமது பிழையினைப் பொறுத்தருளுமாறு ஒற்றியூர்ப் பெருமானைப் பரவிப் போற்றுகின்றார். பாடல்கள் 4, 5, 9களில் உள்ள உரையாடல்கள்