பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 125 இரண்டு கண்களையும் இழந்தமையால் அவரடைந்த பெருந் துயரத்தை நன்கு புலப்படுத்துவனவாய்ப் படிப்போரை உருக்குவன வாக உள்ளன. இங்ங்னம் வருந்தும் நிலையிலும் ஒற்றியூர் இறைவன் அவருக்கு விரைந்து அருள் புரிந்திலர். உடன் வரும் தொண்டர்கள் வழிகாட்டிக் கொண்டு முன்னே செல்ல வடதிருமுல்லை வாயிலை அடைகின்றார். அத்திருப்பதிப் பெருமானை இறைஞ்சிக் கண் பார்வையின்றித் தான் படும் துன்பத்தைக் களைந்தருள வேண்டி "திருவும் மெய்ப்பொருளும்" (7.69) என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றுகின்றார். 'சங்கிலியின் பொருட்டு என் கண்களைக் கவர்ந்து கொண்ட பெருமானே, கண்ணிழந்து வருந்தும் அடியேனது பெருந் துயரத்தைக் களைந்தருள்வாயாக' என்று வேண்டும் போக்கில், விண்பணிந் தேத்தும் வேதியாமாதர் வெருவிட வேழமன்றுரித்தாய் செண்பகச்சோலைசூழ் திருமுல்லை வாயிலாய் தேவர்தம் அரசே தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் சங்கிலிக்காவென் கண்கொண்ட பண்ப! நின் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. (3) என்ற இப்பதிகப் பாடலில் திருமுல்லைவாயில் இறைவனைப் பரவிப் போற்றுதல் ஈண்டு நினைக்கத் தகுவதாகும். (11) ஊன்று கோல் பெற்று உதவப் பெறுதல்: திருமுல்லை வாயிலிலிருந்து வெண்பாக்கத்திற்கு" வருகிறார் நம்பியாரூரர். 'பிழையுளன பொறுத்திடுவாய் (7.89) என்ற பதிகம் பாடிப் போற்றுகின்றார் இறைவனை. 104. வெண்பாக்கம் (திருவளம்புதூர்):சென்னை- அரக்கோணம் இருப்பூர்திவழியில் உள்ள திருவள்ளுரிலிருந்து 7 கல் தொலைவு பூண்டி நீர்த் தேக்கத்துள் மூழ்கி விட்டது. கோயிலிலிருந்த மூர்த்திகள் இத்தேக்கத்தின் கரையில் ஓர் அறையில் புகலிடம் பெற்றுள்ளன. நம்பியாரூரர் இத்தலத்தில் ஊன்றுகோல் பெற்றனர்.