பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-10 திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 127 என்பது இதன் முதற்பாடல். இத்திருப்பதிகத்தைப் போற்றிப் பாடி உடன் வந்த சிவனடியார்களுடன் கச்சி நகரிலேயே தங்குகின்றார். (13) உடற்பிணி நீக்கப் பெறுதல்: பல தலங்களை வழிபட்டுக் கொண்டு திருத்துருத்தியை" அடைகின்றார். அத் திருத்தல இறைவனைப் பணிந்து தம்முடம்பிற் பொருந்திய நோயினை ஒழித்தருளுமாறு வேண்டுகின்றார். அடியார்கள் அன்பினால் சொல்லிய குறைகளை நீக்க வல்ல திருத்துருத்தி இறைவன் வன்றொண்டரை நோக்கி, நீ இத்திருத்தலத்தின் வடபால் உள்ள திருக்குளத்தில் தீர்த்தமாடுவாயாக' என்று பணித்தருள்கின்றார். அந்த அருள்மொழியைச் செவிமடுத்த வன்றொண்டர் இறைவனை மின்னுமா மேகங்கள் (7.74) என்னும் பதிகம் பாடித் தொழுது சென்று அக்குளத்தில் மூழ்கி நோய் நீங்கி எழுந்து ஒளி திகழும் திருமேனியுடன் கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறுகின்றார். மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திறைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி யகன்கரை உறைவார் அடியிணைத் தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளா ரடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னு டம்படும் பிணியிடர் கொடுத்தானை (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். (14) வலக்கண் பெறுதல்: திருந்துருத்திப் பெருமான் 'சொன்னவார் அறிவார் திருவருளால் உடல்நலம் பெற்று உய்ந்த 105. துருத்தி (திருத்துருத்தி - குற்றாலம்): மயிலாடுதுறை - தஞ்சை இருப்பூர்தி வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து அரைகல் தொலைவிலுள்ளது. இறைவன் சொன்னவாறறிவார்.