பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மூவர் தேவாரம் - புதிய பார்வை தம்பிரான் தோழர் தம் அடியார்களுடன் பல தலங்களையும் சேவித்துக் கொண்டு ஒரு நாள் மாலைப் பொழுதில் திருவாரூரை அணுகுகின்றார். அங்கு ஆரூர்ப் பரவையுண் மண்டலி என்னும் திருக்கோயிலையடைந்து துவாயா (7.96) என்னும் திருப் பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். விண்டானே மேலையார் மேலையார் மேலாய எண்டானே எழுத்தோடு சொற்பொருள் எல்லாமுன் கண்டானே கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே அண்டானே பரவையுண் மண்டலி அம்மானே. (7) என்ற ஏழாம்" பாடலில் தமக்குக் கண்ணைத் தந்தருளும்படி வேண்டுகின்றார். பின்னர்ப் புறம்போந்து ஓரிடத்தில் தங்கியிருக் கிறார். அர்த்த யாமத்திலே அடியார்களுடன் திருமூலட்டானத்து இறைவனை வழிபடச் செல்லுகின்றார்." எதிர் வந்த அன்பர் களை நோக்கி ஆரூர்ப் பெருமானோடு தமக்குள் அயன்மை வருந்திக் கூறும் நிலையில் 'குருகுபாய் (7.37) எனக் கைக்கிளைத் திணை" அமைந்த செந்தமிழ் மாலையைப் பாடுகின்றார். 106. பெரி.புரா. ஏயர்கோன் - 304 107. கைக்கிளை - ஒருதலைக் காமம். அகத்திணையில் சிறிய திணை. இதற்கு ஒரே துறைதான் உண்டு. 'கை' என்பது சிறியதைக் காட்டும். கைக்குடை, கையேடு, கைவாள், கைவண்டி, கைத்தடி, கைக்குழந்தை, கைம்மாற்று, கையடக்கம், கைக்கடிகாரம், கைத்துப்பாக்கி என்ற தொடர்களுடன் வைத்தெண்ணினால் இது தெளிவாகும். சங்க இலக்கியம் முழுவதும் துருவி ஆராயின் நான்கு பாடல்களே இத்துறை பற்றியனவாக உள்ளன. இந்நான்கும் கலித்தொகையில்தான் உள்ளன. (56,57, 58, 100) இவற்றுள் மூன்று கபிலர் பாடியவை ஒன்று நல்லுத்திரனார் பாடியது.