பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 129 குருகுபாயக்கொழுங் கரும்புகள் நெரிந்தசாறு அருகுடா யும்வயல் அந்தண்ஆ ரூரரைப் பருகுமாறும்பணிந் தேத்துமாறும்நினைந்(து) உருகுமாறும்மிவை யுணர்ந்தவல் லீர்களே. (1) என்பது இத்திருப்பதிகத்தின் முதற் பாடல். அடுத்து தேவாசிரிய மண்டபத்தை இறைஞ்சிக் கோபுரத் தைக் கை கூப்பித் தொழுது உள்ளே புகுகின்றார். புற்றிடங் கொண்ட பெருமான் திருமுன் வீழ்ந்தெழுகின்றார். பூங்கோயில மர்ந்த பெருமான் திருமேனியைக் காணத் தமக்கு ஒரு கண் போதாமையால் மிகவும் வருந்துகின்றார். மீளா அடிமை (7.95) என்ற செந்தமிழ்ப் பதிகம் பாடி 'அடியேனைத் துன்பக் கடலி னின்றும் கரையேற்றி மற்றைக் கண்ணாகிய வலக் கண்ணையும் தந்தருள்வீராக" என வேண்டுகின்றார். மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீ வாழ்த்து போதீரே. (1) விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி யாட்பட்டேன் குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினி எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. (2)