பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 135 என்னும் திருத்தலத்தை அணுகி வேதியர் தெரு வழியாகச் செல்லும்போது ஒர் இல்லத்தில் மங்கல ஒலியும் அதற்கு எதிர்ப் புறமாக உள்ள மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுகின்றன. நம்பியாரூரர் மாறுபட்ட ஒலிகள் நிகழ்தற்குரிய காரணத்தை அங்குள்ளாரை நோக்கி வினவுகின்றார். அங்கிருந்தவர் கூறியது. ஒரு வேதியனுக்கு இரண்டு ஆண் மக்கள். ஒத்த பருவத்தராய் ஐந்து வயது நிரம்பப் பெற்ற அச் சிறுவர்கள் ஒரு மடுவில் நீராடின பொழுது அவ்விருவருள் ஒருவனை முதலை விழுங்கிற்று, மற்றொரு சிறுவன் பிழைத்துக் கொண்டான். பிழைத்த சிறுவனுக்கு இப்பொழுது உபநயனம் நன்டைபெறுகின்றது. இம்மங்கல ஒலிக்கு இது காரணம். இது மரித்த சிறுவனை நினைப்பித்தமையால் வருந்திய பெற்றோர் தம் அழுகையொலி எதிர் இல்லத்தில் கேட்கக் காரணமாயிற்று. இத்துயர்ச் செய்தி கேட்ட தம்பிரான் தோழர் சிந்தை கலங்கி நிற்கின்றார். இந்நிலையில் மைந்தன் இறந்ததை நினைந்து வருந்தும் பெற்றோர்கள் சுந்தரர் போந்த செய்தியறிந்து அழுகையை நீக்கிக் கொண்டு முகமலர்ச்சியுடன் அங்கு விரைந்து வந்து அடிகளை வணங்குகின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கி நீவிரோ புதல் வனை இழந்தவர்கள்?' என்று பரிவுடன் வினவுகின்றார். அவர்கள் மீண்டும் அடிகளை வணங்கி, "பெரியீர், அது முன்னர் நடந்தது. அது கிடக்க தங்களை நெடுங் காலமாகக் கண்டு வணங்கக் கருதியிருந்த எங்கள் அன்பு வீணாகாமல் தாங்கள் ஈண்டு எழுந்தருளியது எமது தவப்பேறு' என்று மகிழ்ந்துரைக்கின்றனர். தம்மை அடைந்தாரின் இடரைக் களைந்தருளவல்ல சேரமான் தோழர் இந்த வேதியரும் அவர்தம் துணைவியாரும் மகனை இழந்த துன்பத்தையும் மறந்து யான் இங்கு வருகை தந்தமைக்கு மகிழ்கின்றனர். இவர்தம் அன்பு மகனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்த பின்னரே அவினாசி இறைவனை இறைஞ்சு தல் வேண்டும்' என்று அருளிச் செய்கின்றார்.