பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மூவர் தேவாரம் - புதிய பார்வை பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசி படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும் கத்துரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோண மேயிருந் தீரே. (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். தம்பிரான் தோழருக்கு இசைந்தருளிய இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறுமணப் பொருள்களும் பட்டாடைகளும் கடுகிச் செல்லும் குதிரையும் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தருள்கின்றார். விலை மதிக்கவொண்ணா அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த வன்றொண்டர் திருநாகையிலிருந்து புறப்பட்டு நடுவிலுள்ள தலங்களையெல்லாம் சேவித்துக் கொண்டு திருவாரூருக்குத் திரும்புகின்றார். பூங்கோயிலமர்ந்த பெருமானைப் போற்றி மகிழ்ந்து இருக்கின்றார். (17) முதலையுண்ட பாலனை மீட்டுத் தந்தருளுதல்: புற்றிடங் கொண்ட பெருமானைப் போற்றி மகிழ்ந்திருந்த நம்பியாரூரர் ஒரு நாள் தம் நண்பராகிய சேரமான் பெருமாளை நினைக்கின்றார். ஒரு நன்னாளில் சோழ நாட்டைக் கடந்து கொங்கு நாட்டை அடைகின்றார். திருப்புக்கொளியூர் அவினாசி" 109. அவிநாசி: திருப்பூரிலிருந்து 8 கல் தொலைவு, பேருந்து வழி. சுவாமியின் பெயரே தலத்திற்கும் பெயராயிற்று. முதலையுண்ட பாலனை உயிர்ப் பித்துக் கொடுத்த அற்புதம் நிகழ்ந்த தலம். முதலை இழுத்த மடு இப்பொழுது தாமரைக் குளம்' என்ற பெயருடன் திகழ்கின்றது. சிறுவன் முதலை வாயினுட்புக்கு ஒளிந்த ஊர் புக்கொளியூர். இப்பொழுந்து இந்த இசைத் துறைக்கு மேல் தளத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சிக் கழகம் கண்ட முன்னாள் கல்வி அமைச்சர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் இத்தலத்துப் பெருமான் பெயரை வைத்துக் கொண்டவர். இந்த நிறுவனத்தில் அடியேன் 1979-80இல் 15 திங்கள் பணியாற்றினேன்.