பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 133 ஏத நன்னிலம் ஈரறுவேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக் கோத னங்களின் பால்கறந்தாட்டக்கோல் வெண்மணற் சிவன்றன் மேற்சென்ற தாதை தாளற எளிந்த சண்டிக்குன் சடைமிசை மலரருள் செயக்கண்டு பூத வாளிநின் பொன்னடி அடைந்தேன் பூம்பொழில் திருப்புன்கூர் உளானே. (3) என்ற மூன்றாம் பாடலில் நம்பியாரூரர் குறிப்பிட்டுப் போற்றி யுள்ளமை கண்டு மகிழத் தக்கது. ஏயர்கோன் கலிக்காமரை அருமை நண்பராகக் கொண்ட தம்பிரான் தோழர் அவருடன் திருவாரூர் திரும்புகின்றார். இரு வரும் பூங்கோயிலமர்ந்த பெருமானைச் சேவித்து மகிழ்கின்றனர். சில நாட்கள் நம்பியாரூரருடன் அளவளாவி மகிழ்ந்த கலிக்காமர் அவரிடம் விடை பெற்றுத் தம்மூர் திரும்புகின்றார். (16) பொன்னும் நவமணிகளும் பெறுதல்: ஏயர்கோன் கலிக்காமர் தம்மிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அவரூர் திரும்பிய பிறகு சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டு நாகைக் காரோணத்துக்கு" சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனை இறைஞ்சி நின்று தமக்கு விலையுயர்ந்த அணிகலன் களும் வேண்டும் என்ற குறிப்புடன் 'புத்துர் புக்கிரந் துண்டு' (7.46) என்ற முதற் குறிப்புடன் தொடங்கும் திருப் பதிகம் பாடுகின்றார். 108. நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்): நாகப்பட்டினம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து அரைக்கல் தொலைவு. ஒரு முனிவரைக் காயத்துடன் வானுலகிற்கு ஆரோஹணம் செய்யும்படி இறைவன் அருளியதால் காயாரோஹணம் என்பது மருவி காரோணம் என்று தலப் பெயருடன் சேர்ந்தது.