பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மூவர் தேவாரம் - புதிய பார்வை செய்தியை ஒருவரும் அறியாதவாறு மறைத்து விட்டு தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு நம்பியாரூரரை வரவேற்கின்றார். தாம் அவருக்குள்ள சூலை நோயைத் தீர்த்து அவருடன் அளவளாவு வதற்கு விரைகிறது தம் மனம் என்று கூறி அவரைப் பார்க்க வற்புறுத்துகின்றார் நம்பியாரூரர். நம்பியாரூரரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு வேறு வழியின்றி அவரைத் தம் கணவரின் உடல் இருந்த இடத்திற்கு இட்டுச் செல்கின்றார். கலிக்காமரின் உடல் நிலையைக் கண்டு வருந்தும் நம்பியாரூரர் 'நானும் இவர் முன்பு என் ஆவியைத் துறப்பேன்' என்று துணிந்து கலிக்காமரின் வயிற்றில் செருகப் பெற்றிருந்த வாளினைப் பற்றிக் கொண்டு அவ்வாளினாலேயே தம்முயிரைப் போக்கிக் கொள்ள முயல்கின்றார். இந்நிலையில் சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுகின்றார். நம்பியாரூரரின் கையிலிருந்த வாளினைப் பறித்து அவர் செயலைத் தடுக்கின்றார். கலிக்காமர் உயிர் பெற்றெழுந்தமையைக் கண்ட வன்றொண்டர் மிக்க மகிழ்ச்சி யுற்று கலிக்காமரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றார். கலிக்காமரும் தம் கையிலிருந்த வாளினை நிலத்தில் வீசியெறிந்து விட்டுத் தம்பிரான் தோழரின் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சு கின்றார். இருவரும் எழுந்து நின்று ஒருவரையொருவர் அன்பினால் அனைத்துக் கொண்டு கெழுதகை நண்பர்களாகின்றனர். இறைவ னுடைய திருவருள் திறத்தை விரைந்து போற்றுகின்றனர். இதன்பின்னர் தம்பிரான் தோழர் கலிக்காமருடன் திருப்புன் கூரை அடைந்து இறைவனது திருக்கோயிலை வலம் வந்து வணங்கி அந்தணாள னுன்ன டைக்கலம் புகுத (7.55) என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் பரவுகின்றார். தம் அன்புடைத் தோழராகிய ஏயர்கோன் கலிக்காம நாயனாரைப் பற்றிய சூலை நோயாகிய கடும் பிணியைத் தீர்த்தருளிய திருப்புன் கூர்ப் பெருமானின் திருவருட் செயலை,