பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 131 ஒற்றுமைப்படுத்தத் திருவுளங் கொள்ளுகின்றார் அண்டர் நாயகன். கலிக்காமருக்குச் சூலை நோயை ஏவுகின்றார். இந்நோய் அவரை அதிகமாக வருத்துகின்றது. கலிக்காமர் இறைவனை வேண்டுகின்றார். இறைவன் அவர்முன் தோன்றி 'உன்னை வருத்தும் சூலை நோய் வன்றொண்டர் வந்து தீர்த்தா லன்றித் தீராது" என்று கூறியருள, கலிக்காமர், 'வழி வழி என் முன்னோர்க்கெல்லாம் தொழு குலமாய் விளங்கும் முழுமுதற் கடவுள் என்று வழிபட்டு வரும் எனது நோயினை நும்மால் வலிந்து ஆட்கொள்ளப் பெற்ற புதியவனாகிய வன்றொண்டரால் தீர்க்கப்படுதலை விடத் தீராமல் வருந்துதலே நன்றாகும்' என்று மறு மாற்றம் தருகின்றார். இறைவனும் மறைந்தருளுகின்றார். இந்நிலையில் கங்கைவார் சடையான் வன்றொண்டரை அணுகுகின்றார். 'நீர் நம் ஏவலால் ஏயர்கோன் கலிக்காமரை அடைந்து அவனை வருத்துகின்ற சூலை நோயைத் தீர்ப்பாயாக' எனப் பணித்தருளுகின்றார். இந்த அருளுரையைக் கேட்ட நாவலூரார் அகமகிழ்கின்றார். தம் வருகையை ஆள் மூலம் சொல்லியனுப்புகின்றார். வன்றொண்டர் தம்மை நோக்கிச் சூலை நோயைத் தீர்க்கும் எண்ணத்துடன் வருகின்றார் என்பதை உணர்ந்த கலிக்காமர், 'இறைவனைத் தூதனாக ஏவல் கொண்ட கொடியன் வன்றொண்டன் போதருவதற்கு முன்னே என்னை வருத்தும் இக்கொடிய நோயினை வயிற்றோடும் கிழித்துப் போக்குவேன்' என்று துணிந்து உடை வாளினால் தம் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிரைப் போக்கிச் சூலை நோயினையும் தீர்த்துக் கொள்ளுகின்றார். இத்துன்ப நிகழ்ச்சியைப் பொறுக்கலாற்றாது மனம் துளங்கிய கலிக்காமரின் தேவியார் தம் கணவரது பிரிவுக்காற்றாது உயிர் விடத் துணிகின்றார். இந்த நிலையில் நம்பியாரூரர் இங்கு எழுந்தருளும் செய்தியை அறிகின்றார். 'ஒருவரும் அழக் கூடாது' என்று இல்லறத்தாருக்குப் பணித்து கணவர் உயிர் துறந்த