பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 இரண்டாம் பொழிவு நாள் 26-08-2003 பிற்பகல் 2.30 2. பண்சுமந்த - தேவாரப் பாடல்கள் தேவார ஆசிரியர் மூவருள் இயல் இசைத் தமிழாகிய திருப்பதிகங்களை அடைவு படுத்திய முறை சம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், நாவுக்கரசர் அருளியவை நான்கு, ஐந்து, ஆறு-ஆம் திருமுறைகளாகவும், காலத்தால் பிற்பட்டுத் தோன்றிய நம்பியாரூரர் அருளியவை ஏழாம் திருமுறையாகவும் முறைப்படுத்தப் பெற்றமையை நாம் அறிவோம். மூவராலும் அருளிச் செய்யப் பெற்ற திருப்பதிகங் கள் முழுவதும் 'பண்முறை' எனவும், தல முறை எனவும் இருவேறு முறையில் வரிசைப்படுத்தப் பெற்று நடைமுறையில் இருப்பதை அனைவரும் அறிவர். 'பண்முறையே பழைய முறையாகும். இம் முறை அமைப்பே பழைய ஏட்டுச் சுவடிகளில் இடம் பெற்றுள்ளது. ஏழு திருமுறை களாகப் பகுத்து வழங்கும் திருமுறைப் பகுப்புக்கு அடிப்படை யாய் அமைந்தது. இப் பண்முறை அமைப்பே எனக் கருதுதல் பொருந்தும். (1) முதல் திருமுறை ஆளுடைய பிள்ளையார் முதன் முதல் அருளியது தோடுடைய செவியன் (1,1) என்னும் முதற்குறிப்புடைய பிரமபுரத் திருப்பதிகமாகும். எல்லையிலா மறைகளுக்கெல்லாம் முதலாக அமைந்தது 'ஓம்' எனும் எழுத்தாகிய பிரணவம் ஆகும். 'ஓம்' என்பதிலுள்ள ஒகாரத்தினை 'தமிழ் என்பதன் முதல் எழுத்தாக அமைந்த தகர மெய்யுடன் இணைத்துத் தோன்றிய சிறப்பு தோடுடைய செவியன் என்ற இத்திருப்பதிகத்துக்கு