பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மூவர் தேவாரம் - புதிய பார்வை உண்மையால் முதல்திரு முறையில் முதல் திருப்பதிகமாக முறைப்படுத்தப் பெற்றது. இத்திருமுறையில் நட்டபாடை தக்கேசி தக்க ராகம் குறிஞ்சி பழந்தக்கராகம் வியாழக்குறிஞ்சி யாழ்முரி என ஏழு பண்களில் அடங்கிய நூற்று முப்பத்தாறு பதிகங்கள் முறைப்படுத்தப் பெற்றுள்ளன. இத் திருப்பதிகத்திற்குரிய பண் நைவளம் என்பதாகும். இதனை இக் காலத்தார் நட்டபாடை என வழங்குவர். முதன் முதலில் பாடி யருளிய திருப்பதிகத்தில் அமைந்த பண் நட்டபாடை யாதலின், பிள்ளையார் நட்டபாடைப் பண்ணில் பாடியருளிய திருப்பதிகங்கள் யாவும் தோடுடைய செவியன்' என்ற திருப்பதிகத்தை யொட்டி முதல் திருமுறையில் முதற்கண் வைக்கப் பெற்றன. அடுத்து நிகழ்ந்த அற்புதச் செயல் கோலக்காவில் பிள்ளையார் பெருமானால் அளிக்கப் பெற்ற பொற்றாளம் ஆகும். இந் நிலையில் பாடிய திருப்பதிகம் 'மடையில் வாளை பாய (1.29) என்பது. இது தக்கராகம் என்று பாடப் பெற்றதாதலின், தக்கராகப் பண்ணமைந்த திருப்பதிகங்கள் யாவும் இதனைச் சார வைக்கப் பெற்றன. தக்கராகப் பண்ணுடன் பெயரால் ஒற்றுமையுடையது பழந் தக்க ராகம் என்ற பண்ணாகும். எனவே பழந்தக்கராகப் பண் ணமைந்த பதிகங்கள் தக்க ராகப் பதிகங்களை அடுத்து வைக்கப் பெற்றன. 'தக்க கைசிகம் என்ற பெயரே தக்கேசி எனத் திரிந்தது என்பர். இப்பெயர் ஒற்றுமை கருதி தக்கேசிப் பண்ணமைந்த 2. யாழ்நூல் - பக் 285