பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 153 விரிவாகக் கூறப் பெற்றுள்ளது; வீர சோழிய ஆசிரியர் தமிழில் ஓரளவு சுருங்கக் கூறியுள்ளார். தனிக் குற்றெழுத்தாய் வருவது லகு. குற்றொற்று, நெடில், நெட்டொற்று ஆக வருவது குரு. குற்றெழுத்து ஈற்றில் நின்ற நிலையிலும் விட்டிசைத்த நிலையிலும் குருவாதலும் உண்டு. லகுவுக்கு ஓரலகும் குருவுக்கு இரண்டலகும் கொள்வர். எனவே இரண்டு லகு கூடி ஒருகுருவாக மதிக்கப்படும் நிலையை அடைவதும் உண்டு. லகு, குரு என்னும் இவ் விரண்டினையும் வைத்து உறழ்தலினால் விருத்த பேதங்களைத் தோற்றுவிக்கலாம். வடமொழி விதிகளை அடியொற்றி எழுத்தெண்ணி வகுக்கப் படும் செய்யுட்களைத் தமிழில் முறைப்படி சீர் வகையால் பகுத்து நோக்குமிடத்து அவற்றின் ஒசையும் சந்தமும் மேலும் வேறுபடுதல் காணலாம். இசைத்தமிழ் உருக்களாகிய தேவாரத்திருப் பாடல் களை அவற்றின் கட்டளை ஓசை வேறுபடாது வகைப்படுத்த வேண்டுமாயின், இசைத்தமிழில் ஆளத்தி செய்தற்குரிய அசைச் சொற்களாகிய தென்னா, தெனா, தென்னா, தெனா என்பவற்றின் திரிபுகளாக இக் காலத்து வழங்கும் தானா, தனா, தான, தன, தனன, தானன, தனனா, தானனா, தனான, தானான, தனானா, தானானா எனவரும் சந்தக் குழிப்புகளாளாகிய சீர் நிலைகளைக் கொண்டு அடி வகுத்தல் அமைவுடைய தாகும். தன - இரு லகு கொண்டது தானா - இரு குரு கொண்டது