பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மூவர் தேவாரம் - புதிய பார்வை கடலரையனாகிய வருணனை நோக்கித் திருவஞ்சைக் களத்தப் பருக்கு அறிவிக்கும்படி பணித்த திருப் பாடலுடன் நிறைவு பெற்றிருத்தல் அறிந்து மகிழத் தக்கதாகும். நூறு திருப்பதிகங்களால் இயன்ற இத் திருமுறையில் தென்றமிழ்ப் பயனாய் வந்த திருத்தொண்டத்தொகை (7.39) முப்பத்தொன்பதாம் பதிகமாகவும், திருவைந்தெழுத்தின் சிறப்பினை உணர்த்தும் நமச்சிவாயத் திருப்பதிகம் (7.48) நாற்பத்தெட்டாம் பதிகமாகவும், அமைந்திருத்தல் காணலாம். சிந்தையின் தெளி வினைப் புலப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது பஞ்சமம் என்ற பண்ணாகும். சிந்தையில் தெளிவுடையோர் பஞ்சமம் என்னும் இப்பண்ணில் பரமனைப் பாடி மகிழ்வர். பஞ்சமம் பாடியாகும் தெள்ளியார்கள்ளந்தீர்ப்பார் (4.293) என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு திருவஞ்சைக் களத்துப் பெருமானைப் பாடிப் போற்றும் நிலையில் 'வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட் டொழித்தேன்' என்ற தெளிவுடைய சிந்தையினராகிய நம்பியாரூரர் அஞ்சைக் களத்து இறைவன் பால் விடை பெற்றுத் திருநொடித் தான் மலையை நோக்கிச் செல்லும் பொழுது சிந்தையும் தெளிவு மாகித் தெளிவினும் சிவமுமாகி (4.48:5) என்றவாறு சிவபரம் பொருளைத் தியானிக்கும் நிலையில் பாடிய 'தான் எனைமுன் படைத்தான் (7.100) என்ற பதிகம் பஞ்சமம் என்ற பண்ணில் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமுடையதாகும். வடமொழி யாப்பிலக்கண மரபு வடநூல் வழித் தமிழறிஞர் சிலர் தமிழ்ச் செய்யுள் வகை களுக்கு வடமொழி யாப்பிலக்கண மரபை அடியொற்றி லகு குரு என்னும் எழுத்தமைப்பினைக் கொண்டு புதிய இலக்கணங் களைக் கற்பித்துக் கூறியுள்ளனர். தமிழில் பிற்காலத்தவர் ஏற்றி யுரைத்த இவ்விருத்த இலக்கணம் வடமொழி நூல்களில்