பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 151 தம்பிரான் தோழராகிய சுந்தரர் பல தலங்களையும் சேவித்து திருவஞ்சைக்களம்' பெருமானை இறைஞ்சிப் போற்றும் நிலையில் கயிலைப் பெருமான் ஆணையின் வண்ணம் தேவர் முனிவர் களுடன் அங்கு வந்த வெள்ளையானையின் மீது அமர்ந்து திருக் கயிலாயம் சென்றார் என்பது வரலாறு. அப்போது பாடிய திருப் பதிகம் தானெனை முன் படைத்தான் (7.100) என்பது. இஃது இவ்வேழாந்திருமுறையின் இறுதிக் கண் வைக்கப்பெற்றது. திருவெண்ணெய் நல்லூரில் அருட்டுறைப் பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பெற்ற நம்பியாரூரர் அப் பெருமானது திருவருள் இன்பத்தில் திளைத்துப் போற்றிய 'பித்தா பிறைசூடி, பெருமானே அருளாளா என்ற திருப்பதிகத்தினை முதலாகக் கொண்டு தொடங்கிய இத்திருமுறை சேரமான் தோழராகிய சுந்தரர் இறைவனது அருளிப் பாட்டின் வண்ணம் திருவஞ்சைக் களத்திலிருந்து வெள்ளானை மீதமர்ந்து திரு நொடித்தான்" மலையாகிய திருக்கயிலாயத்தை அடைந்து தாம் பெற்ற திருவருள் இன்பத்தை நிலவுலகத்தார்க்குப் புலப்படுத்தும் நிலையில் ஆழி 15. திருவஞ்சைக்களம்: (திருவஞ்சிக் குளம்) இது திருச்சூரிலிருந்து (கேரளம்) 30 கல் தொலைவிலுள்ளது. திருச்சூரிலிருந்து கொடுங்கோளுர் (Granganore) செல்லும் பேருந்தில் கொடுங்கோளுருக்கு எதிர்க்கரையில் இறங்கி உப்பங்கழி வழிய்ே (Backwaters) வஞ்சி (சிறு படகு) அமர்த்திக் கொண்டு அம்பலம் (கோயில்) போகலாம். சேரநாட்டு வழக்கப்படி நீராடி ஈர ஆடையுடன் செல்ல வேண்டும். பட்டுடுத்தியும் செல்லலாம். அஞ்சைக் களத்தப்பர் தரை மட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். தலைக்குத் தலை (7.4) இரண்டாவது திருப்பாடல் கூறுவதைத் திருமேனியின் சிரசில் சேவிக்கலாம். முதல் சுற்றின் ஒரு சிறு அறையில் சேரமானும் தம்பிரான் தோழரும் செப்புத் திருமேனிகளாகக் காட்சி தருகின்றனர். ஆடி சுவாதியன்று தமிழ் நாட்டு மக்கள் திரளாகச் சென்று வழிபடுகின்றனர். 16. நொடித்தான் சிவபெருமான் நொடித்தல் அழித்தல்' இறைவன் எழுந்தருளிய மலை கைலை; அது நொடித்தான் மலை.