பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மூவர் தேவாரம் - புதிய பார்வை தக்க ராகப் பண்ணுக்குரியனவாக இவண் குறித்த கட்டளைகள் ஏழும் 23-30; 31-33; 34-38, 39-40, 41-42-43; 44; 46-ஆம் பதிகங்களில் முறையே அமைந்திருத்தல் காணலாம். இவற் றிடையே 45-ஆம் பதிகமாகவுள்ள துஞ்ச வருவார் என்னும் முதற்குறிப்புடைய பதிகம் பழம்பஞ்சுரம் என்ற பண்ணுக்கு உரியதென்பதும், இப்பதிகம் தக்கராகப் பண்ணில் சேர்க்கப் பெற்றிருப்பது பிற்காலத்தில் ஏடெழுதுவோர்களால் நேர்ந்த பிழை என்பதும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கனவாகும். இவ்வுண்மை, 'துஞ்ச வருவார் (பெரி. புரா.திருஞான - 1010) எனத் தொடங்கும் சேக்கிழார் பெருமான் பாடலால் நன்கு தெளியப் படும். பழந்தக்கராகப் பண்ணுக்கு உரியனவாக இத்திருமுறையில் 47 முதல் 62 வகை பதினாறு பதிகங்கள் உள்ளன. இப்பதிகங் களில் அமைந்த கட்டளை விகற்பம் மூன்று எனத் திருமுறை கண்ட புராணம் கூறும். ஆயினும் இவற்றை யாப்பியல்பு ஒன்றையே நோக்கி வகைப்படுத்துங்கால் இவை ஆறு வகையாக அமைந் திருத்தல் காணலாம். பழந்தக்கராகம் 1. பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வதன்றியும்போய் (1.47:1) தானதான தானதான தனதன தானதான (47 முதல் 51 வரை உள்ள பதிகங்கள் ஒரே நீர்மையன) 2. மறையுடையாய் தோலுடையாய் வார்சடையே வளரும் (1.52:1) தனதனனா தனதனனா தானதனா தனனா (52-ஆம் பதிகம்)