பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 167 3. தேவாயும் அசுரராயும் சித்தர்செழு மறைசேர் (1.53:1) தானதான தனனதான தானாதன தனனா (53-ஆம் பதிகம்) 4. பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால் (1.54:1) தானா தானன தானன தானன தானா தானன தானானா என முன்னுள்ள இரண்டடிகளைப் போலவே பின்னிரண்டடி களும் வந்து முடிவன 54-58ஆம் பதிகங்கள். 5. ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் (3.59:1) தனனா தனதனன தானாதனா தனதான தான தனனாதன (59-ஆம் பதிகம்) 6. வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் (1.60:1) தானதன தனதனன தனதான தனதனன (60-62ஆம் பதிகங்கள்) இவண் காட்டியவற்றுள் 47 முதல் 53 முடியவுள்ள பதிகங் களில் காணப்படும் முதல் மூன்று யாப்பு விகற்பங்களும் 60 முதல் 62 வரையுள்ள பதிகங்களில் காணப்படும் ஆறாவது யாப்பு விகற்பமும் நாற்சீரடியால் இயன்ற கொச்சகக் கலிப்பாக்களாய் இசைவகையால் ஒரே தன்மையினவாக அமைந்துள்ளன. எனவே இந் நால்வகை யாப்பையும் ஒரே கட்டளையாகக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இனி நான்காவதாகக் குறிக்கப்பட்ட யாப்பும் ஐந்தாவதாகக் குறிக்கப்பட்ட யாப்பும் இரு வேறுபட்ட கட்டளை களாகும். பண்ணு பழந்தக்கராகப் பண்ணின் மூன்றுளவாம்' என