பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மூவர் தேவாரம் - புதிய பார்வை வரும் திருமுறை கண்ட புராணத் தொடரைக் கருத்திற் கொண்டு இவண் குறித்த யாப்பு வகை ஆறையும் கூர்ந்து நோக்கின் அவையனைத்தும் முன் குறித்தபடி மூன்று கட்டளைகளுள் அடங்குதல் புலன் ஆகும். இத்திருமுறையில் 63 முதல் 74 வரையுள்ள பன்னிரண்டு பதிகங்களும் தக்கேசிப் பண்ணுக்கு உரியன. இப்பதிகங்களில் அமைந்த கட்டளைகள் இரண்டாகும். தக்கேசி கட்டளை - 1 எரியார் மழுவொன்றேந்தி யங்கை யிடுதலை யேகலனா (1.63:1) தனனா தனனா தானா தானா தனதன தானதனா (63-65 ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.) கட்டளை - 2 பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் (1.69:1) தானா தனனா தனனா தனனா தனனா தானானா என வரும். (66 முதல் 74 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின) 'உன்னரிய தக்கேசிக்கு ஓரிரண்டு வருவித்தார்' என்றபடி தக்கேசிக்கு இரண்டு கட்டளையும் வந்தன. தக்கேசியை அடுத்துள்ளது குறிஞ்சிப் பண். இப் பண்ணுக்கு உரியனவாக 75 முதல் 103 முடிய இருபத்தொன்பது பதிகங்கள்