பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 169 உள்ளன. மேவு குறிஞ்சிக்கு ஐந்து என்பதனால் இப்பதிகங் களில் வந்த கட்டளைகள் ஐந்து என்பது புலனாம். குறிஞ்சி கட்டளை - 1 காலைநன் மாமலர் கொண்டடி பொருந்திக் கைதொழு மாணியைக் கறுதவெங் காலன் (1.75:1) தானன தானன தானன தனனா தானன தானன தனதன தானா (75-76ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின) கட்டளை - 2 பொன்றிரண் டன்ன புரிசடை புரள பொருகடற் பவளமொ டளனிறம் புரையக் (1.77:1) தானன தான தனதன தனனா தனதன தனதன தனதன தனனா (77-79ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.) கட்டளை - 3 கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே (1.80:1) தானா தனதானா தனனா தானானா (80-89ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின) கட்டளை - 4 அரனை யுள்குவீர் (1.90:1) தனன் தானனா என இருசீரடியாகிய குறளடி நான்கினால் இயன்ற பாவாதலின் இதனைத் 'திருவிருக்குக் குறள் எனப் பெயரிட்டு வழங்குவர்.