பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O மூவர் தேவாரம் - புதிய பார்வை தனனா என்பது தானா எனவும், தானனா என்பது தனதானா எனவும் வரும், 92 முதல் 96 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின் பாற்படும். கட்டளை - 5 எய்யா வென்றித் தானவ ரூர்மூன் றெரிசெய்த (1.97:1) தானா தானா தானன தானா தனதானா இதன்கண் அடி முதற் சீராகிய தானா என்பது 'தனனா எனவும் தானனா எனவும் தனதன எனவும் வரும், 97 முதல் 102 வரையுள்ள பதிகங்களைப் பார்க்க. 103ஆம் பதிகத்தின் முதற் பாடலை, தோடுடை யானொரு காதிற் றுய குழைதாழ ஏ(எ) டுடையான் தலைகல னாக இரந்துண்ணும் நா(அ) டுடையான் நள்ளிரு ளேம நடமாடும் கா(அ) டுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே (1.103:1) எனப் பிரித்து வேண்டுமிடங்களில் அளபெடைதந்து மேற்குறித்த கட்டளையுள் அடக்குதல் வேண்டும். இவ்வாறே ஓசை வேறு படும் இடங்களில் விட்டிசைக்கும் குறிலை நெடிலாக்கியும் அளபெடை தந்தும் வேண்டும் செய்கை செய்து கட்டளைப் பாற்படுத்தல் வேண்டும். இனி, வியாழக் குறிஞ்சி என்னும் பண்ணில் 104 முதல் 108 வரை இருபத்தைந்து பதிகங்கள் உள்ளன. வியாழக் குறிஞ்சிக்கு ஆறு எனத் திருமுறை கண்ட புராணம் கூறுதலால் இப்பதிகங்களில் அமைந்த கட்டளை விகற்பங்களில் ஆறு என்பது புலனாம்.