பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii வந்தவர். இசையின்றி பக்தி இலக்கியம் இல்லையாதலால் இசைத் துறை தொடர்பு நெருக்கமாகவும் இருந்தது. இவற்றையெல்லாம் நினைந்தவண்ணம் பேராசிரியர் பி. சாம்பமூர்த்திக்கு இந்த நூலை அன்புப் படையலாக்கி மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்நூலையும் இது போன்ற பலநூல்களை எழுதுவதற்கும் தமிழ்ப்பணியே தெய்வப் பணியாக கருதி வாழும் அடியேனுக்கு நல்ல உடல் நிலையும் 87-ஆம் அகவையிலும் கண்ணொளி கெடா நிலையும் வழங்கி என்னுளே தோன்றாத்துணையாக அந்தர் யாமியாக எழுந்தருளியிருக்கும் வேங்கடம் மேய விளக்கிற்குப் பெரிய பிராட்டியார் மூலம் எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள். புல்லும் பசுவிற்காம், பூண்டும் மருந்திற்காம்; கல்லும் திருக்கோயில் கட்டுவதற்காம்; - தொல்லுலகில் ஏழை எளியேன் எதற்காவேன்? செந்நிநகர் வாழும் வடிவேல வா." - கவிமணி தே.வி. வேங்கடம்" ந. சுப்புரெட்டியார் AD-13, அண்ணாநகர் தொ.பே :26211583 சென்னை - 600 040 6. இதுதான் இசைத்துறையில் முதன் முதலாக அச்சேறி வெளிவந்த முதல் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாகும். 7. மலரும் மாலையும் முருகன் புகழ் மாலை - 1