பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi பெருகியுள்ளதையும் பொருட்படுத்தாது வெளியிட்டமை இந் நூலின் பேறு என் பேறுங் கூட. இந்த நூல் அச்சேறுங்கால் மூலக் கைப்படியுடனும் பார்வைப் படிவங்களுடனும் ஒப்பு நோக்கிச் சரிபார்த்து உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு.பு. சியாமளாவுக்கு என் அன்பும் ஆசியும் கலந்த நன்றி என்றும் உரியது. இந்த அரிய நூலை இந்திய இசைத் துறை முதல் பேராசிரியர் துறைத் தலைவர் பி. சாம்பமூர்த்தி அவர்கட்கு அன்புப் படைய லாக்கிப் பெருமிதம் அடைகின்றேன். 1960 ஜூலை முதல் திருப்பதியில் பணியாற்றியபோது ஆறு ஆண்டுகள் குடும்ப மின்றித் தனிமையாக இருந்த காலத்தில் இசைக் கல்லூரியில் பணியாற்றிய ஜானகி ராமன் (கண்ணொளி இல்லாதவர்) தம் மனைவியுடன் அடுத்த தெருவில் வாழ்ந்தவர். அவரைப் பார்க்க அடிக்கடிச் செல்வதுண்டு. அக்கல்லூரி பல்கலைக் கழகம் உள்ள சாலையின் ஓரத்தில் அமைந்திருந்ததால் அடிக்கடி திரும்பும் போது அங்குச் சென்று வருவதுண்டு. இதனால் திரு. பசுபதி என்ற இசைப் பேராசிரியரும் தமிழ் பேசும் பிறரும் நண்பர் களானார்கள். அப்போது பேராசிரியர் பி. சாம்பமூர்த்தியும் (1964-66) நண்பரானார். அவரிடம் தெலுங்கில்தான் பேசுவேன். இதனால் நெருக்கம் அதிகமாயிற்று (அவர் வயது முதிர்ந்த நிலை); அவர் வீட்டிலும் சென்று பழகுவதுண்டு. 1970க்குப் பிறகு திருப்பதி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப் பெற்று வளரும் நிலையில் பல்வேறு விழாக்கள் நடைபெறும் போது பெரும்பாலும் பேராசிரியர் பசுபதி அவர்களே இறை வணக்கம் பாடுவதற்கு ஏற்பாடு செய்து வந்தேன். சில சமயம் திரு ஜானகிராமன் அவர்களும் பாடுவதுண்டு. (அவர் தம் தந்தையார் இலால் குடி உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரிய ராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் தன் மகனுடன் வாழ்ந்து 5. இதற்குப் பிறகு அவர் தொடர்பு இல்லை.