பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV டாக்டர் இராமநாதன் அவர்களை ஈண்டு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தம் தலைமைப் பதவியை தம்முடன் பணி யாற்றும் பேராசிரியர் ஒருவருக்கு அவர் முன்னேற்றம் இ! கருதி விட்டுக் கொடுத்த தியாக உணர்வு பொன்னெழுத்துகளால் ப்ொறிக்கப்பெற . -ே வேண்டிய தொன்று. இப்பெருமகனாரை நான் 1996 - முதல்தான் அறிவேன். நான் பணியாற்றும் தெற்கு தென்-கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறு வனத்தின் ஆலோசகராக இருந்து வருவதால் நன்கு அறிவேன். அவர்தம் சுறுசுறுப்புணர்வும் சேவை மனப்பான்மையும், பிறருக்கு உதவும் பண்பும், எல்லோருக்கும் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டிய நேர்மையும் என்னை அதிகமாகக் கவர்ந்தன. பண்பாட்டு நிறுவனத்திற்கு ஒல்லும் வகையெல்லாம் உதவி வரு பவர். நிறுவனத்தின் ஆதரவில் நான் நடத்தும் எல்லா இலக்கிய விழாக்களில் இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடவும் இசைத்துறை மாணவிகளை அனுப்பி வைத்து உதவியது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலின் கைப்படியை அன்புடன் ஏற்று வெளியிடு வதற்கு உதவிய நிவேதிதா பதிப்பக உரிமையாளர் திருமதி தேவகி இராமலிங்கத்திற்கு என் அன்புகலந்த நன்றி என்றும் உரியது. வெளியிடும் செலவு ஒன்றுக்குப் பத்தாகப் 4. திருப்பதியில் ஒய்வு பெற்ற பிறகு சென்னையில் தமிழ் வ்ளர்ச்சிக் கழகத்தின் வெளியீடாகிய தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது (1978 பிப்பிரவரி முதல் 1979 ஜூன் வரை - 18 மாதங்கள்) அருகிலிருந்த இசைத் துறையுடன் தொடர்பு இல்லை. 1978 முதல் டாக்டர் இராமநாதன் இசைத்துறையில் பணியாற்றியிருந்தும் அவரைப் பார்க்க எந்தவித வாய்ப்புகளும் ஏற்பட வில்லை. நானும் 1979 முதல் வெளியூர் நிறுவனங்களில் பணியாற் றியமையால் செ.ப.க த்துடன் எந்தவிதத் தொடர்பும் ஏற்படவில்லை.