பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv மனம் உள்ளவர் ஏழை எளியவர்களின்பால் பாசமும் நேசமும் மிக்கவர். அவர்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என்ற பெரு நோக்கம் கொண்டவர். தந்தை பெரியார்வழி நின்று சாதி வேறுபாட்டைக் கடிபவர். பெரியார் கொள்கைகள் பலவற்றை ஏற்று நடப்பவர். பொது அறிவு (Common Sense) மிக்கவர். தமிழ்ப்பற்று மிக்கவர். தமிழ் வளர்ச்சிக்காகத் தம் இல்லத்தையும் ஈந்தவர் (வள்ளல் அழகப்பரை போல). நான் சில ஆண்டுகள் (1995-2003) மதிப்பியல் இயக்குநராகப் பணியாற்றிய தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பண்பாட்டு நிறுவனத்தில் பாரத ரத்னா டாக்டர் சி. சுப்பிரமணியத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் காப்பாளராக இருந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி என் பணிக்குத் துணையாக இருந் தவர். இத்தகைய பேரன்பர் இந்நூலுக்கு வழங்கியது இந்நூலின் பேறு என் பேறுங்கூட வாழ்த்துரை வழங்கிய வள்ளலுக்கு என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது. iള്ള இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் | டாக்டர் எம். பிரமீளா குருமூர்த்தி (பேரா | சிரியர் இந்திய இசைத் துறைத் தலைவர்) இராணி மேரிக் கல்லூரியில் கற்று M.A. தேர்வில் முதல் நிலைகளில் தேறி பல பரிசுகள் . t பெற்றுப் புகழ்பெற்ற புகழ்வாய்ந்த கதா காலட் - .ே சேபத் தலைப்பில் ஆராய்ந்து பிஎச்.டி (1988) பட்டம் பெற்றவர்கள். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் பயிற்சி பெற்றவர்கள், இவர்தம் இசைப் புலமையைப் பாராட்டி இராமலிங்கர் பணிமன்றம் 'இசைக் கலைச் செல்வர்' என்ற விருதையும் (1997), ஐம்ப தாண்டு சுதந்திரம் நிறைவு விழா பூநீரத்னா’ விருதையும் (1998) வழங்கிச் சிறப் பித்தன. இத்தகைய புகழ்பல பெற்ற அம்மையார் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியது. இந்நூலின் பேறு என் பேறும் கூட அணிந்துரை வழங்கியமைக்கு ஏன் இதயங்கனிந்த நன்றி என்றும் உரியது.