பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii நூல் முகம் பெற்ற தாய்தனை மகமறந் த்ாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந்தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே." - இராமலிங்க அடிகள் மறைமலையடிகள் அறக்கட்டளைப் பொழிவுகள் (2002-2003) பற்றிய அழைப்பு சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறையிலிருந்து வந்ததும் (பிப்ரவரி 22, 2003), அந்தப் பொழிவுகள் மூவர் தேவாரம் பற்றியே இருக்க வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்ததை அறிந்ததும் 'மூவர் தேவாரம் - புதிய பார்வை' என்ற தலைப்பில் பேசுவதாக உறுதிசெய்து என் பேச்சை எழுத்து மூலம் தயாரிக்கத் தொடங்கி விட்டேன். இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய திரு. இராம.வீரப்பன் (சென்னைக் கம்பன் கழகம், எம்.ஜி.ஆர் கழகம் - இவற்றின் தலைவர்). அவர் அமைச்சராக இருந்த காலம் முதல் நான் அறிவேன். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் தான் மதுரை - காமராசர் பல்கலைக் கழகம் அடியேனுக்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட நல்ல அமைச்சர்கள் சிலருள் இவர் முன்னணியில் இருப்பவர் எம்.ஜி.ஆர்.ஐப் போலவே விரிந்த 3. திருஅருட்பா - இரண்டாந் திருமுறை நமச்சிவாய சங்கீர்த்தனலகரி - 7