பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மூவர் தேவாரம் - புதிய பார்வை ஓசை நிறைந்து நிற்குமாறு காணலாம். 104 முதல் 108 வரை அமைந்த பதிகங்கள் ஒரே கட்டளையுட்பட்டு அடங்குவன. கட்டளை - 2 வாருறு வனமுலை மங்கைபங்கன் (1.109:1) தானன தனதன தானதனா (109 முதல் 115 வரையுள்ள பதிகங்கள் இதனுள் அடங்கும்) கட்டளை - 3 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் (1.116:1) கூவிளம் கூவிளம் தேமாங்காய் தேமா கருவிளங்காய் (116, 117ஆம் பதிகங்கள் கட்டளைக் கலித்துறை யாப்பின் பாற்படுவன. 116-ஆம் பதிகத்தின் முதற்பத்துப் பாடல்களும் ஈற்றில் ஏகாரவீறு பெறவில்லை.) கட்டளை - 4 சுடுமணி யுமிழ்நாகம் சூழ்தர வரைக்கசைத்தான் (1.1.18:1) கருவிளம் புளிமாங்காய் கூவிளம் கருவிளங்காய் 118-ஆம் பதிகமாகிய இது விளம் காய் விளம் காய்' என நாற்சீரடியால் வந்த கொச்சக ஒருபோகு" ஆகும். 20. கொச்சக ஒருபோகு ஒருபோகு என்ற தொடர் ஓர் உறுப்பு போகியது என்று பொருள்படும். கொச்சகம் ஒருவழி வாராதது கொச்சக ஒரு போகு ஆகும். கொச்சக உடை போலப் பெரும்பான்மையும் திரண்டு வருவது கொச்சகம் எனப்படும்.