பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 173 கட்டளை - 5 முள்ளின்மேல் முதுகூகை முரலும் சோலை (1.1.19:1) தேமாங்காய் புளிமாங்காய் புளிமா தேமா 119-ஆம் பதிகமாகிய இது 'காய் காய் மா மா' என நாற் சீரடியால் வந்த கொச்சக ஒருபோகு. இதன்கண் ஆட-லான்', 'பாட-லான், ஒட-லாற், காட-லாற், பாடெ-லாம்' என இரண்டாம் எழுத்தாகிய குற்றெழுத்து விட்டிசைத்து நெட்டெழுத்தின் நீர்மை வாய் நிற்றல் காணலாம். கட்டளை - 6 பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செய்த (120:1) தனதன தனதன தனதன தனதன ஈற்றடி இறுதிச்சீர் தனனா என நிற்கும். ஒரு சில பாடல் களில் இரண்டாம் அடி ஈற்றுச் சீரும் தனனா என நிற்றல் உண்டு. நெகிழ்ந்த ஒசைய வாகிய நெட்டெழுத்துகள் விரவாது குற்றெழுத்து களால் இயன்று இடையறவுபடாது பாடல் முழுவதும் தொடர்ந்து முடியும் நிலையில் முடுகிய ஓசையுடையதாய் வரும் பாடல் அராகம் எனப்படும். இங்ங்னம் முடுகியலாய் வரும் பாவின் ஓசையமைப்பினை உருட்டு வண்ணம் என்பர் தொல்காப்பியர்." 120 முதல் 125 வரையுள்ள பதிகங்கள் முடுகியலாய் அராகமாய் வருதலின் திருவராகம் எனப் பெயர் பெற்றன." திருவராகம் 21. உருட்டுவண்ணம் அராகந் தொடுக்கும் - தொல்.செய்யுள் - 232. 22. மேன்மை நடையின் முடுகுவராகம் (பெரி.புரா.ஞானசம் 277) எனச் சேக்கிழார் கூறுதலை நோக்குங்கால் முடுகிய நடையினையுடைமை பற்றியே இப்பெயர் எய்திய தென்பது நன்கு தெளியப்படும்.