பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重了4 மூவர் தேவாரம் - புதிய பார்வை என்ற பெயர் பிற்காலத்தில் 'திருவிராகம் எனத் திரிந்து வழங்குவதாயிற்று. திருத்தாளச் சதி (126-ஆம் பதிகம்) பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்றவும்பரப் பாலே சேர்வா யேனேற்கா முனிவர்களும் (1.126;1) தத்தத்தா தந்தத்தா தனந்தனந்த தந்தனத் தானா தானா தானானா தனதன தனணதனா செற்றிட்டே வெற்றிசேர்' என வல்லொற்றுப் பயின்று வரும் இடங்களில் தந்தத்தா என்பது தத்தத்தா என அமையும். ஆடரங்குகளில் மகளிர் பரடிக்கொண்டு நடித்தற்குப் பொருந்திய தாளச் சொற்கட்டுகளாக இப்பதிகம் அமைந்தமையால் இது 'திருத்தாளச் சதி என்னும் பெயரித்தாயிற்று. திருஎகபாதம் (127-ஆம் பதிகம்) ஏகம் - ஒன்று. பாதம் - அடி. ஏகபாதம் - ஒரடி ஒரடியே பொருள் வேறுபட நான்குமுறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைதலின் ஏகபாதம் என்னும் பெயர்த்தாயிற்று. 'பிரம புரத்துறை பெம்மா னெம்மான் என்ற ஒரடியே நான்குமுறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைந் தமை காணலாம். 'ஏகபாதம் என்னும் சித்திரகவிக்கு மூல இலக்கியமாக விளங்கும் இத்திருப்பதிகத்துள் 1 முதல் 10 வரையுள்ள பாடல் களும் 12-ஆம் பாடலும் நாற்சீரடிகளாலும், 11-ஆம் பாடல் ஐஞ்சீரடிகளாலும் இயன்று சீர்கள் வேறுபட்டு வருதலின் இதனை வியாழக்குறிஞ்சிக்குரிய கட்டளைகளுள் சேர்த்தெண்ணாது சித்திரகவி என்னும் சிறப்பு நோக்கித் தனிப்பட எண்ணுதல் முன்னோர் முறையாகும். திருஎழுக் கூற்றிருக்கை (128-ஆக பதிகம்) ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பெறவில்லை. 129 முதல் 135 வரை அமைந்த ஏழு திருப்பதிகங்களும் மேகராகக் குறிஞ்சி பண்ணில்