பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 177 என்னும் இசைப்பா, யாழ், வீணை முதலிய நரம்புக் கருவிகளில் வைத்து எழுத்தெழுத்தாக வாசிக்க ஒண்ணாததாய்ப் பாடலர்கள் வாயினால் மட்டும் பாடுதற்கு உரிய அருமை உடையதாகும் இந்நுட்பத்தினை, "மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்முரி பாடி" (1.44:5) எனவரும் தொடரில் வாய்முரி என்னும் சொற்குறிப்பினால் ஆளுடைய பிள்ளையார் உய்த்துணர வைத்த திறம் உணரத்தக்க தாகும். இரண்டாந் திருமுறை இதன்கண் இந்தளம் பியந்தைக்காந்தாரம் சீகாமரம் நட்டராகம் காந்தாரம் செவ்வழி என்னும் ஆறு பண்களுக்குரிய 122 திருப்பதிகங்கள் முறையே தொகுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் முறையே 1 முதல் 39 முடிய அமைந்த திருப் பதிகங்கள் இந்தளப் பண்ணுக்கு உரியவையாகும். 'தேவு வந்த இந்தளத்தின் செய்திக்கு நான்கு' எனத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதலால், இப்பதிகங்களில் அமைந்த கட்டளை விகற்பங்கள் நான்கு என்பது பெறப்படும். இவற்றிலுள்ள யாப்பு விகற்பங் களை முறையே காட்டுவேன். இந்தளம் யாப்பு - 1 செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் (2.1:1) தான தானன தானன தானன தானனா