பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மூவர் தேவாரம் - புதிய பார்வை இதன்கண் முதற்சீராகிய 'தான என்பது தனன, தந்த என ஆதலும், அடுத்த சீரின் முதலிலுள்ள நெட்டெழுத்துடன் இணைந்த 'தானனா ஆதலும், இரண்டாஞ்சீர் தனன ஆதலும், தந்ததன, தானதன என ஒரெழுத்து மிக்கு நிற்றலும் அமையும். 1முதல் 10வரை அமைந்துள்ள பதிகங்களின் பாடலமைப்பினை நோக்கி இவற்றினை உணரலாம். யாப்பு - 2 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம் (2.11:1) தேமாங்காய் கூவிளம் கூவிளம் தேமாங்காய் இவ்வாறு முதற் சீரும் நான்காம் சீரும் காய்ச்சீர்களாகவும் இரண்டாஞ்சீரும் மூன்றாஞ்சீரும் விளச்சீர்களாகவும், சிறு பான்மை மாச்சீர்களாகவும் அமைய இங்ங்னம் நாற் சீரடியால் வருவன 11 முதல் 16 வரை உள்ள திருப்பதிகங்களாகும். யாப்பு - 3 நிலவும் புனலும் நிறைவா ளரவும் (2.17:1) தனனா தனனா தனனா தனனா என வரும். சில இடங்களில் தனனா என்பது ‘தானா என அமைதலும் உண்டு. 17 முதல் 24 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர வயரும் நறுமென் சாயல் முகமென் கோயாம் எனச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வரும் வரிப் பாடல் இக்கட்டளைக்குரிய தொன்மை இலக்கியமாக அமைந்தமை இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். 23. சிலப்.ஆய்ச்சியர் குரவை - 23