பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மூவர் தேவாரம் - புதிய பார்வை எனச் சிலப்பதிகாரக் கானல் வரியில் வந்துள்ள சார்த்து வரிப் பாடலை யொத்து அமைந்தது, இவண் காட்டிய பிரமபுரத் திருப் பதிகமாகும். சார்த்து வரியாவது, பாட்டுடைத் தலைவன் ஊராகிய பதியொடும் அவனுக்கு அமைந்த பெயரோடும் சார்த்திப் பாடப் பெறும் இசைப் பாட்டாகும். “பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடும் சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே” என அரும்பத உரையாசிரியர் காட்டிய மேற்கோள் நூற்பா இவ் வரிப்பாட்டின் இயல்பினை விளக்குவதாகும். இவண் காட்டிய தீங்கதிர் வான் முகத்தான் என்ற கானல் வரிப் பாடலில் பாட்டுடைத் தலைவன் சோழன். அவன் ஊர் புகார். அவ்வூரின் வனப்புரைப்பதாக இவ்வரிப்பாடல் அமைந்திருத்தல் காணலாம். மதுரையில் கூன் பாண்டியன் காழிப்பிள்ளையாரை அவர் தம் ஊர் பற்றி வினவும் போது அதற்கு மறுமொழியாக பிள்ளையார் 'பிரம்புரம், வேணுபுரம் (2.70) என்ற பதிகம் அருளியதாக வரலாறு. இத் திருப்பதிகம் பாட்டுடைத் தலை வனாகிய சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள கழுமலம் என்னும் சீகாழிப் பதியின் சிறப்பினை விளக்கும் முறையில் அமைத்திருத்தல் காணலாம். இதனைத் தொடர்ந்து 71 முதல் 74 வரையுள்ள பதிகங்களும் சிலப்பதிகாரம் கானல் வரி யிலுள்ள சார்த்து வரிப்பாடல்களின் அமைப்பினைப் பொருளாலும் யாப்பாலும் அடியொட்டி அமைந்துள்ளன. நாற்சீரடியாகிய கலியடியின் மேல் மாச்சீர் இரண்டு பெற்று வருதல் இப்பதிகங் களின் யாப்பு விகற்பமாகும். யாப்பு - 5 விண்ணி யங்குமதிக் கண்ணியான் - விரி - யுஞ்சடைப் பெண்ண யங்கொள்திருமேனியான் - பெரு - மானனற் கண்ண யங்கள்திரு நெற்றியான் - கலிக் - காழியுள் பண்ண யங்கொள்மறை யாளரேத்து - மலர்ப் - பாதனே (2.75:1)