பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 183 தனதன தானன தானா தனான தனதன தானர் தனதன் தானன ஆதலும், தான ஆதலும், தானன தனதன. ஆதலும், தானா தனனா ஆதலும் தனான 'தானன ஆதலும் உண்டு. 65 முதல் 69 முடியவுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. திருநாவுக்கரசர் தேவாரம் 4-ஆம் திருமுறையில் 2, 4 ஆம் எண்ணுள்ள காந்தாரப் பதிகங்கள் இவண் குறித்த யாப்பின்பாற் படுவன. யாப்பு - 4 பிரமனுர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி (2.70:1) கருவிளம் கூவிளங்காய் புளிமா கூவிளம் புளிமா தேமா என முதற்சீரும் மூன்றாம் சீரும் விளச்சீர், மாச்சீர்களாகவும் இரண்டாம் சீரும் நான்காம் சீரும் பெரும்பாலும் காய்ச்சீர் களாகவும் சிறுபான்மை விளச்சீர்களாகவும், ஐந்தாம் சீரும் ஆறாம் சீரும் மாச்சீர்களாகவும் இவ்வாறு ஆறு சீர்களால் இயன்றது. இவ்யாப்பு விகற்பமாகும். (விகற்பம் - வேறுபாடு) தீங்கதிர் வாண்முகத்தான் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வாவேனும் வாங்குநீர் முத்தென்று வைகலு வான்மகன்போல் வருதிர் ஐய வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானற் பூங்கோதை கொண்டு விளைஞர்போன் மீளும் புகாரே எம்மூர்". 26. சிலப். கடலாடு காதை - கானல்வரி சார்த்து வரி - 28