பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மூவர் தேவாரம் - புதிய பார்வை பதிகங்கள் பியந்தைக் காந்தாரப் பண்ணுக்கு உரியனவாகவும் அமைந்துள்ளன. 'காந்தாரமாகிய பியந்தையாங் கட்டளைக்கு வாய்ந்த வகை மூன்றாக்கி' எனத் திருமுறை கண்ட புராணம் கூறுதலால் காந்தாரப் பதிகங்களும் பியந்தைக் காந்தாரப் பதிகங் களும் மும்மூன்று கட்டளைகள் பெறுவன எனக் கொள்வர் யாழ்நூலாசிரியர். காந்தாரப் பதிகங்களில் பத்து யாப்பு விகற்பங் கள் காணப்படுகின்றன. காந்தாரம் யாப்பு - 1 உருவார்ந்த மெல்லியலோர் பாக முடையீர் அடைந்தோர்க்குக் (2.54:1) தனதான தானதனா தான தனனா தனதானா என வரும். தனதான தானான ஆதலும், தானதனா தானானா ஆதலும் அமையும். 54 முதல் 58 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 2 நலங்கொள் முத்து மணியு மணியுந் திரளோதம் (2.59:1) தனனா தானா தனன தனனா தனதானா தனனா தானா ஆதலும், தானா தனனா ஆதலும், தனதானா ‘தானானா ஆதலும் உண்டு. 59 முதல் 64 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 3 கறையணி வேலிலர் போலும் கபாலந் தரித்திலர் போலும் (2.65:1)