பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 181 என இவ்வாறு தரவு கொச்சகக் கலிப்பாவாக அமைந்தது சீகாமரப் பதிகங்களின் முதற்கட்டளையாகும். 40 முதல் 48 வரையமைந்த பதிகங்கள் இதன்பாற் படுவன. கட்டளை - 2 பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறும் கண்ணினே ரயலே பொலியும் கடற்காழி (2.49:1) தான தானன தான தானன தான தானன தான தானனா தானனா தனனா தனனா தனதானா என முன்னிரண்டடிகளைப் போன்று பின்னிரண்டடிகளும் அமைவது சீகாமரப் பண்களின் இரண்டாங் கட்டளையாகும். இதன் இரண்டாம் அடியினை, கண்ணி னேரயலே - பொலி - யுங்க டற்காழி தான - தனதனா - தன - தான - தானானா எனப் பிரிந்திசைத்தலும் ஏற்புடையதாகும். இதன்கண் முதலடியும் மூன்றாம் அடியும் எண்சீர்களாகப் பிரிந்திசைக்க இரண்டாமடியும் நான்காமடியும் சீர்கள் குறைந்து வருதலால் அவற்றின் பிற் பாதியாகவுள்ள பொலியுங் கடற்காழி', 'அருளாலும் குறைவிலரே” என்றாற் போலும் தொடர்களை மீண்டும் ஒருமுறை மடித்துக் கூற, அவ்வடிகள் ஒசையால் நிறைவு பெறுதல் காணலாம். தனதானா என்பது ‘தானானா எனவும், தனதனனா' எனவும், தானதனா எனவும் வரும். 49 முதல் 53 வரையுள்ள பதிகங் கள் சீகாமரப் பண்ணின் இரண்டாங் கட்டளையின் பாற்படுவன. இத்திருமுறையில் 54 முதல் 82 வரையுள்ள பதிகங்கள் காந்தாரப் பண்ணுக்கு உரியன்வாகவும், 83 முதல் 96 வரையுள்ள 25. தரவுக் கொச்சகக் கலிப்பா - தரவு என்பது கலிப்பாவில் முதலில் வரும் உறுப்பு. ஓராடையில் ஒரு வழியடக்கியது போல், ஒரு செய்யுளில் பல குறள் அடுக்கப்படுவது. இங்ங்ணம் வரும் கலிப்பா.