பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 187 தானன தனதன. ஆதலும், தத்த தந்த 'தான ஆதலும், தனத்த தனனா தானா ஆதலும் அமையும், 83-முதல் 87 வரையுள்ள பதிகங்கள் ஒரேய்ாப்பின. திருநாவுக்கரசர் தேவாரம் நாலாந்திருமுறையில் சிவனெனும் ஓசை (4.8:1) என்ற முதற் குறிப்புடைய பியந்தைக் காந்தாரப் பதிகம் இக்கட்டளையில் அடங்குதல் காணலாம். கட்டளை - 2 துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன் (2.88:1) தனதந்ததந்த தனதந்ததந்த தனதநத தநத தனனா எனவரும். தனன 'தான ஆதலும் தான 'தனன. ஆதலும், தானன 'தனதன. ஆதலும் பொருந்தும், 89 முதல் 96 வரையுள்ள பதிகங் கள் ஒரே யாப்பின. 97 முதல் 112 வரை அமைந்த பதிகங்கள் நட்டராகப் பண்ணுக்கு உரியன. நட்டராகப் பதிகங்களில் நான்கு யாப்பு விகற்பங்கள் உள்ளன. நட்டராகம் யாப்பு - 1 நம்பொருள்நம் மக்க ளென்று நச்சி யிச்சை செய்துநீர் (2.971) தந்ததந்ததந்த தந்த தந்த தநத தநதனா தந்த என்பது 'தான எனவும் 'தனன எனவும், தத்த' எனவும், தய்ய எனவும் வருதல் பொருந்தும், 97 முதல் 101 வரை உள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. 99, 100, 101-ஆம் பதிகங்களில்,