பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பொழிவு நாள் : 24-03-2003 முற்பகல் - 10 மணி 1.தோரண வாயில் தலைவர் அவர்களே, தமிழ்ச் சான்றோர்களே, மாணவச் செல்வங்களே. அனைவருக்கும் வணக்கம். அறக்கட்டளைச் சொற்பொழிவு களைத் தொடங்கும் முன்னர் முன்னுரையாகச் சில சொல்ல விரும்புகிறேன். முதலாவது ஞானசம்பந்தர் தேவாரம். சம்பந்தர் மூன்றாண்டுப் பருவத்தில் இறையருளால் கவிபாடியவர். பதினாறு வயதில் சிவப்பேறு அடைந்தவர். சம்பந்தப் பெருமான் அந்தணர் குலத் தவர். இவர்தம் அருளிச் செயல்கட்கு பண் வகுத்து இவருடன், திருக்கோயில்தோறும் சென்று யாழில் அமைத்துப் பாடியவர் திரு நீலகண்ட யாழ்ப்பாணர் இவர் சமுகத்தினரால் தாழ்ந்த குலம் (தீண்டத் தகாதவர்) என்று முத்திரை இடப்பெற்ற குலத்தைச் சார்ந்தவர். அக் காலத்தில் வைணவர்கள் இவரைத் திருக்குலத் தார் என்ற பெயரால் வழங்கிச் சிறப்பித்தனர். இரண்டாவது நாவுக்கரசர் தேவாரம். நாவுக்கரசர் என்ற திருப்பெயர் இறைவனால் வழங்கப்பெற்றது. இவர் வேளாளர் குலத்தவர். இளமையில் பெற்றோர் மரித்தமையால் திலகவதியார் என்ற தமக்கையார் பராமரிப்பில் வளர்ந்தவர். சமண் சமயத்தைத் தழுவியவர், பல்லாண்டுகள் அங்கிருந்து பல அரிய தொண்டுகள் ஆற்றி மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தவர். சம்பந்தரால் அப்பர் என வழங்கப்பெற்றும் போற்ற பெற்றவர். 81 ஆண்டுகள் வாழ்ந்து சிவப்பேறு அடைந்தவர். திருமணம் ஆகாதவர்.