பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மூவர் தேவாரம் - புதிய பார்வை மூன்றாந் திருமுறை இத்திருமுறையில் முதற் பண்ணாக அமைந்தது காந்தார பஞ்சமம் என்பதாகும். 1 முதல் 23 வரையுள்ள பதிகங்கள் இப் பண்ணுக்கு உரியன. இப்பதிகங்களில் காணப் பெறும் யாப்பு விகற்பங்கள் ஐந்தாகும். ஆடினாய் - நறு - நெய்யொடு பால்தயிர் அந்தணர் - பிரி - யாதசிற் றம்பலம் நாடினாய் இடமா - நறுங் - கொன்றை நயந்தவனே. (3.1:1) தானன - தன - தானன தானனா தானனா - தன - தானன தானனா தானனா தனனா - தன - தான தனனா என முன்னிரண்டிடிகளைப் போலப் பின்னிரண்டடிகளும் வரும். இதனை, ஆடினாய் நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம் நாடி - னாயிடமா நறுங் - கொன்றை நயந்தவனே! தான தானன தானன தானன தான தானன தானன தானன தான தானதனா - தன - தானன தான்தனா எனப் பிரித்துப் பாடுதலும் உண்டு. 1, 2ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. இதன்கண் இரண்டாந் திருமுறையில் 49-ஆம் எண்ணுள்ள சீகாமரப் பதிகம் போன்று முதலடியும் மூன்றாமடி யும் நீண்டு நிற்க இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சீர்கள் குறைந்து வருதலால் அவ்வடிகளின் ஈற்றிலுள்ள, நறுங் கொன்றை நயந்தவனே சுருங்க எமதொல் வினையே’ என்றாற் போலும் தொடர்களை மீண்டும் ஒருமுறை மடித்துக் கூற அவ்வடிகள் ஒசையால் நிறைவுபெறுதல் காணலாம்.