பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 191 யாப்பு - 2 இயலிசை யெனும்பொருளின்றிறமாம் புயலன மிடறுடைப் புண்ணியனே கயலன வரிநடுங் கண்ணியொடும் அயலுல கடிதொழ அமர்ந்தவனே கலனாவது வெண்டலை கடிபொழில் கச்சிதன்னுள் நிலனா டொறு பின்புற நிறைமதி யருளினனே (3.3:1) இப்பதிகம் 'தனதன தனதன தானதனா' எனமுச்சீரடி நான்கினால் இயன்ற செய்யுளாய் அதன் மேல் தன்னாதன தானன தனதன தானதன. என நாற்சீர்களால் இயன்ற அடியிரண்டினை வைப்பாகப் பெற்று வந்தமையால் 'நாலடி மேல் வைப்பு' என்னும் பெயர்த்தாயிற்று. நான்கடிகளால் ஆகிய பாடலின் மேலாக இரண்டடியாக வைக்கப் பெற்ற இவ்வுறுப்பு முன்னுள்ள பாடலின் பொருளை முடித்துக் கூறுவதாகும். இவ்வுறுப்பு நாலடிச் செய்யுளின்மேல் வரின் 'நாலடிமேல் வைப்பு' எனவும், ஈரடிச் செய்யுளின்மேல் வரின் 'ஈரடிமேல் வைப்பு' எனவும் வழங்கப் பெறும். இத்திருமுறையில் 3, 4, 108-ஆம் பதிகங்கள் நாலடிமேல் வைப்பாகவும், 5, 6-ஆம் பதிகங்கள் ஈரடிமேல் வைப்பாகவும் அமைந்துள்ளன. ஒத்தாழிசைக் கலிப்பாவின் முடிவில் அதன் பொருளை முடித்துக் கூறும் முறையில் அமைந்த சுரிதகம்" போன்று முன்னுள்ள பாடலின் பொருளை முடித்துக் கூறும் நிலையில் 14 25 கலிப்பாவின் முடிவுப் பகுதி. பாட்டின் கருத்தை முடித்துக் கூறும் உறுப்பு.