பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மூவர் தேவாரம் - புதிய பார்வை பஞ்சமம் யாப்பு - 1 விரையார் கொன்றையினால் - விட - முண்ட மிடற்றினனே (3.551) தனனாதானதனா - தன - தான தன்தனனா. என வருவது. இவண் காட்டிய யாப்பில் தனனா என்பது தனதன. எனவும், தானன எனவும் ஒரெழுத்து மிக்கும். இரண்டாஞ் சீராகிய தானதனா என்பது 'தான தானா என ஒரு மாத்திரை மிக்கும். நான்காஞ்சீராகியதான என்பது தானன என ஒரெழுத்து மிக்கும். ஐஞ்சீராகிய தனதனனா என்பது தானதானா எனவும் வருவது பஞ்சமப் பதிகத்தின் இரண்டாம் யாப்பாகும். யாப்பு - 2 இறையவன் ஈசனெந்தை - இமை - யோர்தொழு தேத்தநின்ற (3.56.1) தனதன தானதானா - தன - தானன தானதானா என வரும். 56 முதல் 62 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. சுந்தரர் அருளிய ஏழாந் திருமுறையில் 97 முதல் 100 வரையுள்ள பஞ்சமப் பதிகங்கள் ஆளுடைய பிள்ளையார் அருளிய இப் பஞ்சமப் பதிகங்களின் யாப்பினை அடியொற்றி அமைந்திருத் தல் காணலாம். இயல்வகை யொன்றேபற்றி நோக்குமிடத்து இப்பதிகங்கள் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்திருத்தல் அறியத் தக்கதாகும்.