பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 2O1 பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செய்த (1.120:1) தனதன தனதன தானன தனதன என நாற் சீரடியாக வந்த திருவிராக யாப்பின்மேல் தனதன என்னும் ஒரு சீர் சேர்ந்து ஐஞ்சீரடியாக அமைந்தது சாதாரிக்குரிய இத் திருவிராக யாப்பாகும். 84 முதல் 88 வரையுள்ள பதிகங்கள் இந்த யாப்புக்குரியனவாம். யாப்பு - 4 திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்தி (3.89:1) தனதனா தனதனா தனதனா தனதனா தந்ததானா என வரும். தனதனா' என்பது தானனா, தத்தனா, தந்தனா ஆதலும், 'தந்ததானா என்பது தன்னதானா, தானதானா, தானதானா தந்த தானா ஆதலும் பொருந்தும், 89 முதல் 93 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 5 விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய சுண்ணவெண் பொடியணி வீரே. (3.94:1) தானன தனதன தானன தானன தானன தனதன தானா என முன்னிரண்டடிகளைப் போன்று பின்னிரண்டடிகளும் வரும். தானன தனதன. ஆதலும், தனதன தானன ஆதலும், தானா தனனா ஆதலும் அமையும், 94 முதல் 99 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பினவாகும். இப்பதிகங்களின் பாடல்கள், முதலடியும் மூன்றாமடியும் நாற்சீர் கொண்ட அளவடியாக அமைய, இரண்டாமடியும் நான்காமடியும் முச்சீர் கொண்ட சிந்தடியாகிய முக்காலடியால் முடிந்தமையின் திருமுக்கால்' என வழங்கப் பெறுவனவாயின.