பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 மூவர் தேவாரம் - புதிய பார்வை இங்ங்னம் அளவடியும் சிந்தடியும் உறழ்ந்து இடைமடக்காய் வந்த இச்செய்யுள் வகையினை ஆசிரியத்துறை என வழங்குவர், பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்." இத்திருமுறையில் 100 முதல் 116 வரையுள்ள பதிகங்கள் பழம் சுரம் என்ற பண்ணுக்கு உரியன. திருமுறைகண்ட புராணத் தில் ஆளுடைய பிள்ளையார் அருளிய பதிகங்களுக்கு அமைந் தனவாகக் கூறப்பெற்ற பண்களில் சாதாரி என்ற பண்ணை யடுத்துப் புறநீர்மை என்ற பண் குறிக்கப் பெற்றுள்ளது. எனினும் தேவாரத் திருமுறை ஏடுகளிலும் இதுகாறும் வெளி வந்த பதிப்புகளிலும் சாதாரிக்கும் புறநீர்மைக்கும் இடையே பழம் பஞ்சுரம் என்ற பண்ணமைந்த பதிகங்கள் பதினேழும், கெளசிகம் என்ற பண்ணுக்குரியதாகக் குறிப்பிடப் பெற்ற 'மாலை மாற்று' என்ற பதிகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளன. ஞானசம்பந்தர் அருளிய பதிகங்களில் பழம் பஞ்சுரம் என்ற பண் அமைந் திருப்பது பற்றியும் அப்பதிகங்களுக்குரிய கட்டளை வகை பற்றியும் திருமுறை கண்ட புராண ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனினும் ஆளுடைப் பிள்ளையார் திருவாலங் காட்டின் உள்ளே செல்லாது அவ்வூரெல்லையில் தங்கிய பொழுது பாடிய 'துஞ்ச வருவார் (1.45) என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தினைக் குறிப்பிடக் கருதிய சேக்கிழார் அடிகள், “துஞ்ச வருவார்' என்றே எடுத்த ஓசை சுருதிமுறை வழுவாமல் தொடுத்தபாடல் பஞ்சுரமாம் பழையதிறம் கிழமைகொண்டு பாடினார்’ என்ற அப்பதிகம் பழம் பஞ்சுரம் பண்ணில் பாடப் பெற்ற செய்தியைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, சம்பந்தப் 29. வீரசோழியம் - யாப்புப் படலம் - 16 உரை நோக்கி அறிக. 30. பெரி.புரா, திருஞானசம்ப.புரா. 1010