பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O4 மூவர் தேவாரம் - புதிய பார்வை என வரும் 108-ஆம் பதிகம் நான்கடிப் பாடலாய் அதன் மேல் ஈரடிகள் வைப்பாகப் பெற்று வந்தமையால் 'நாலடிமேல் வைப்பு என வழங்கப் பெறுகின்றது. இதன்கண் தான 'தனன. ஆதலும், தானன தனதன. ஆதலும் பொருந்தும். நாவுக்கரசர் அருளிய 'திருக்குறுந்தொகை இதே யாப்பினதென்பதையும் இதற்கு மூல இலக்கியமாக அமைந்தன. சிலப்பதிகாரத்தில், ‘நாகநாறு நரந்தை நிரந்தன" என்பது முதலாக வரும் வேட்டு வரிப் பாடல்கள் என்பதையும் நாம் அறிவோம். யாப்பு - 3 மண்ணது வுண்டரி மலரோன் காணா (3.109:1) தானன தானன தனனா தானா என வருவது 109ஆம் பதிகம். இதன்கண் தானன என்பது “தனதன. ஆதலும், ஒரோவழித் தானான தானனா ஆதலும், தனனா தானா என்பது தானதானா ஆதலும் பொருந்தும். யாப்பு - 4 வாம தேகொளா வுரம தேசெயும் புரமெ ரித்தவன் பிரம நற்புரத் தான னாமமே பரவு வார்கள் சீர் விரவு நீள்புவியே. (3.110:1) என்பது, தானன தானனா தனன தானனா தனன தானனா தனன தானனா தனன தானனா தனன தானனா தனன தானதனா. 31 சிலப் - மதுரை - காடுகாண் - வேட்டுவ வரி - (முன்றிலின் சிறப்பு)