பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 2O5 என ஈரடியாய் வரும். முதலடியில் தனன தானனா என்பது நான்கு முறையும், இரண்டாம் அடியில் இரண்டு முறையும், அதன்பின் தனன தானதனா என முடிவது இவ் யாப்பு விகற்ப மாகும். இதன்கண் தனன என்பது தான ஆதலும் பொருந்தும். 110, 111ஆம் பதிகங்கள் ஒரே நீர்மைய. இவண் காட்டிய யாப்பினின்றும் இரண்டாம் அடி சிறிது வேறுபட்டு வருவது, பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்துறை பல்லவ னிச்சரத் தரசு பேணி நின்றார் - இவர் தன்மை அறிவரார். (3.11.2:1) என்பது 112-ஆம் பதிகமாகும். இதன் ஈற்றடி, அரசு பேணி நின்றார் - இவர் - தன்மை அறிவாரார். என வரும். 'இவர் - தன்மை அறிவாரார் என்பதனை மீண்டும் ஒரு முறை இசைத்துப் பாடலின் இசை நல மும் பொருள். நலமும் சிறந்து விளங்குதல் காணலாம். பாடல் தோறும் இச் சொற்றொடரால் இறுதியடி இறுவதையும் காணலாம். யாப்பு - 5 (திரு இயமகப் பதிகங்கள்) 113 முதல் 116 வரையுள்ள பதிகங்கள் யமகம் என்னும் சொல்லணி அமைந்தன. யமகம் என்பது, ஒரடியில் முன்வந்த சொல்லோ தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது. இதனை மடக்கு எனவும் வழங்குதல் உண்டு. யமகம் என்பது வடசொல். அதன் முதல் எழுத்தாகிய "யகரம் தமிழியல் முறைப்படி மொழிக்கு முதலில் வராது; 'யவ்விற்கு இய்யும் (நன்.பதவியல்.நூற்.21) என்றபடி இகரத்தை முதலில் பெற்று 'இயமகம்' என வழங்கப் பெறும் ஈண்டு அது