பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 மூவர் தேவாரம் - புதிய பார்வை திரு' என்னும் சிறப்புடை அடைமொழி பெற்றுத் திருஇயமகம்' என வழங்கப் பெற்றது. உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே. (3:113:1) தானன தானன தானதனா தனதன தானன தானதனா என ஆறு சீரடியால் இயன்றது 113-ஆம் பதிகம். பாயு மால்விடை மேலொரு பாகனே பாவை தன்னுரு மேலொரு பாகனே. (3.114:1) தான தானன தானன தானனா தான தானன தானன தானனா எனவும், ஆழ நீழ லுகந்த திருக்கையே யான பாட லுகந்த திருக்கையே. (3.115:1) தான தான தனன தனதனா தான தான தனன தனதனா எனவும் எண் சீரடிகளால் இயன்றன. 114. 115ஆம் பதிகங்கள் துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டநஞ் சடையதே. (3.116:1) தான தானனா தனதனா தான தானனா தனதனா என ஆறு சீரடியில் இயன்றது 116-ஆம் பதிகம். சீர் வகையால் வேறுபட்ட இப்பதிகங்கள் நான்கும் இசை பற்றிய ஒன்சைத் திறத்தால் ஒத்திருத்தல் பற்றி ஒரே கட்டளையாகக் கொள்ளத் தக்கனவாகும். இவற்றின் முதலடிகளாக மேற்காட்டிய அடிகளில் மெய்யினையே', 'பாகனே', 'இருக்கையே', 'நஞ்சடை யதே' என வரும் சொற்கள், முறையே மடக்கி வந்தமை