பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 2O7 காணலாம். அவற்றுள் மெய் என்பது உடம்பு - உண்மைத் தன்மை எனவும், பாகன்' என்பது ஊர்தியாகக் கொண்டு நடத்துபவன் ஒருபாகத்திற் கொண்டவன் எனவும், இருக்கை' என்பது இருத்தல் இருக்கு என்னும் வேதத்தினை எனவும், 'நஞ்சடையதே' என்பது நல்ல சடையின் கண்ணது, நஞ்சு அமையப் பெற்றது எனவும் இரு வேறு பொருள்களிற் பயின்றுள்ளமை உணர்தற் குரியதாகும். இவ்வாறே இப் பதிகங்களில் உள்ள பாடல்களின் அடிதோறும் ஒரு சொல்லோ தொடரோ மடக்கி வந்து இயைபு' என்னும் தொடை நயம் பொருந்த யமகம்' என்னும் சொல் லணிக்கு உரிய மூல இலக்கியமாய் அமைந்தமையால் இத்திருப் பதிகங்கள் 'திரு இயமகம்' எனப் பெயர் பெறுவன ஆயின. இவற்றுக்குத் திரு இயமகம்' என்ற இப்பெயர் சேக்கிழார் அடிகள் காலத்திற்கு முற்பட்டு வழங்கிய தொன்மையுடைய தாகும். இனி, இவண் குறித்த பழம் பஞ்சுரம் என்ற பண் திருமுறை கண்ட புராணத்தில் ஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களுக்கு உரியதாகக் கூறப் பெறாமையால் இப்பண்ணுக்குரிய 100 முதல் 106 வரையுள்ள பதிகங்களையும் முன்னுள்ள 67 முதல் 99 வரை யமைந்த பதிகங்களுடன் சேர்த்துச் சாதாரிப் பண்ணுக்கு உரியன வாகக் கொண்டு சாதாரிக்கு ஒன்பதா எனத் திருமுறை கண்ட புராணம் கூறியபடி அடியிற் கண்டவாறு ஒன்பது கட்டளைகளாக அடக்குவர் யாழ் நூலாசிரியர்.” I (67–89) V (100-107) II (84-88) VI (108) III (89-93) VII (109) IV (94-99) VIII (110-112) IX (113-116) 32 யாழ் நூல் - பக். 245-47