பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 O மூவர் தேவாரம் - புதிய பார்வை அங்கே தோன்றிய ஈறில் பெருஞ் சோதியினுள்ளே புகும் பொழுது அருளிச் செய்யப் பெற்றது ஆதலின், அவர் பாடியருளிய பதிகங்களின் முடிவில் வைக்கப் பெற்றது. இனி, திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களில் திருமுறை ஏடுகளில் இன்னத் திருவிடைவாசல் கல்வெட்டி லிருந்து வெளி வந்துள்ள மறியார்கரந்தெந்தையம் மாதுமையோடும் பிறியாதபெம் மானுறை யும்மிட மென்பர் பொறிவாய்வரி வண்டுதன் பூம்பெடை புல்கி வெறியார்மலரிற்றுயி லும்விடை வாயே. என வரும் திருப்பதிகம் (கல்வெட்டில் கண்டது) தனனாதன தானன தானன தானா என்னும் கட்டளை யமைப்புடையதாய், முதல் திருமுறையில் 30 முதல் 33 வரையுள்ள தக்கராகப் பதிகங்களையும், இரண்டாம் திருமுறையில் 35முதல் 37வரையுள்ள இந்தளப் பதிகங்களையும் ஒத்திருத்தலால் அவ்விரு பண்களில் ஏதேனும் ஒன்றில் பாடுதற் கேற்ற இசையமைப்புடையதாகக் கொள்ளுதல் பொருந்தும். நான்காந் திருமுறை நாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். நான்காம் திருமுறையில் 113 திருப்பதிகங்கள் உள்ளன. 'வாகீசர் அருந்தமிழின் முந்தாய பல தமிழுக்கு ஒன்றொன்றா மொழிவித்து' எனத் திருமுறை கண்ட புராணம் குறிப் பிடும். இதனைக் கூர்ந்து நோக்குங்கால், திருநாவுக்கரசர்