பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 211 அருளிய தேவாரத்துள் பலபண்கள் ஒவ்வொரு கட்டளையே பெற்றிருத்தலும் ஒருசில பண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளை களைப் பெற்றிருத்தலும் ஒருவாறு உய்த்துணரப் பெறும். நான்காம் திருமுறையில், முதற்பதிகமாக விளங்குவது 'கூற்றாயினவாறு விலக்ககிலீர் (4.1) என்பது முதற்குறிப்புடைய கொல்லிப் பண்ணாகும். கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் (4.1:1) தானாதன தான தனத்தனனா தனனாதன தானன தானதனா என அறுசீரடியால் வருவது இதன் கட்டளையமைப்பாகும். கூற்றா யினவா றுவிலக் ககிலீர் கொடுமை பலசெய் தனநானறியேன் தானா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா தனனா என இதனையே எண்சீரடியாகப் பகுத்திசைத்தலும் உண்டு. காந்தாரம் இத்திருமுறையில் 2 முதல் 7 வரையுள்ள பதிகங்கள் காந்தாரப் பண்ணுக்கு உரியவை. இப்பதிகங்களில் அமைந்த யாப்பு விகற்பங்கள் மூன்றாகும். யாப்பு - 1 சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்திங்கட் சூளாமணியும் (4.2:1) தானன தானன தானா