பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மூவர் தேவாரம் - புதிய பார்வை தனதானா தானா தனனா என வரும் தானன என்பது தனதன, தனான ஆதலும், தானா' என்பது தனனா ஆதலும், 'தனனா தானா ஆதலும் அமையும். 2 முதல் 4 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. 2- ஆம் பதிகத்தில் அஞ்சதியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை என்ற அடியும், 3-ஆம் பதிகத்தில் கண்டே னவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன் என்ற அடியும் பாடல் தோறும் 'நாலடிமேல் ஓரடி வைப்பாக' அமைந்துள்ளன. யாப்பு - 2 மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே (5.1) தானனா தானான தானான தானான தானா தானா என வரும். தானனா என்பது தானான, தனதான, தனதனன என ஆதலும், தானா தனனா ஆதலும் அமையும். காய்ச்சீர் நான்கு பெற்ற தரவு கொச்சகக் கலிப்பாவின் பின் அடிதோறும் இரண்டு மாச்சீர் பெற்று வருவது இவ் யாப்பாகும். 5, 6-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 3 கரவாடும் வன்நெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் (4.7:1) எனக் காய்ச்சீர் நான்கு பெற்று வரும் தரவு கொச்சகம் இம் மூவகை யாப்பும் ஒசைத்திறத்தால் ஒரே கட்டளையாக அடங்கும்.