பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 213 பியந்தைக் காந்தாரம் இதன்கண் எட்டாவது பதிகம் பியந்தைக் காந்தாரமாகும். சிவனெனு மோசையல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை யுளதே (4.8:1) தனதன தானதான தனனா தனனா தனதான தான தனனா என வரும். இப்பதிகம் ஆளுடைய பிள்ளையார் அருளிய இரண் டாம் திருமுறையில் 84 முதல் 86 வரையுள்ள பியந்தைக் காந்தாரப் பதிகங்களுக்குரிய கட்டளையமைப்பினை யுடைய தாகும். தனதன தானன எனவும் தான 'தனன எனவும், தனனா தனனா தனதான தான' எனவும் வருதல் உண்டு. திருஅங்கமாலை ஒன்பதாம் பதிகம் சாதாரிப் பண்ணுக்கு உரியதாகும். தலையே நீவணங்காய் - தலை - மாலை தலைக் கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய் (4:9:1) தனனா தானதானா - தன - தான தனா தனனா தனனா தானன தான தனாதனா - தனனா தானதானா என வரும் ஈரடியாக வரும். இப்பதிகப் பாடல்கள் மூன்றாந் திருமுறையில் 56 முதல் 62 வரையுள்ள பஞ்சமப் பதிகங்களின் யாப்பினை முதலடிக்குரிய யாப்பாகவும், முதல் திருமுறையில் 'பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி (1.54) என்பது முதலாக வரும் பழந்தக்கராகப் பதிகங்களின் முதலாம் மூன்றாம்